மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா : கோவில் நிர்வாகம் எச்சரிக்கை
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்., 23 முதல் மே 4 வரை நடக்கிறது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மே 2ல் நடக்கிறது. இதையொட்டி, பக்தர்களுக்கு நன்கொடையாளர்கள் இலவசமாக வழங்க விரும்பும் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், மஞ்சள் கயிறு, குங்குமம் பாக்கெட்டுகள் உட்பட அனைத்து பொருட்களையும் கோயில் அலுவலகத்தில் நேரடியாக வழங்கி ரசீது பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பாக எந்த ஒரு தனி நபரிடமோ, நிறுவனத்திடமோ தொடர்பு கொள்ள வேண்டாம். விபரங்களுக்கு 0452 - 234 9868, 234 4360ல் தொடர்பு கொள்ளலாம்.
Tags :