மலிவு அரசியல் செய்யும் பாஜக.. அன்பழகன்
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், புதுச்சேரி மாநில உரிமைகளுக்காக போராடிய அதிமுகவுக்குத்தான் முதலமைச்சர் ரங்கசாமி ஆதரவு அளித்திருக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து உண்மையை பேசினார், அது அவரது நிலைப்பாடு. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு புதுச்சேரி பாஜகவினர் தேர்தல் துண்டு பிரசுரங்களில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் மலிவு விளம்பரத்தை தேடுகின்றனர் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tags :