காணாமல் போன இந்திய கடற்படை வீரர் - விசாரணை தீவிரம்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஒரு கப்பலிலிருந்து கடற்படை வீரர் ஒருவர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 27லிருந்து காணாமல் போனதாக கூறப்படும் "ஸாஹில் வர்மா" (Sahil Verma) எனும் அந்த கடற்படை வீரரை தேட, உயர்-மட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக இந்திய கடற்படையின் மேற்கு மண்டல ஆணைய தலைமையகம் தெரிவித்துள்ளது.தகவல் அறிந்ததும் உடனடியாக இந்திய கடற்படை, கப்பல்கள் மற்றும் விமானங்களின் துணையுடன் அவரை தேடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
Tags :