உதய சூரியன் சின்னத்தில் போட்டி: ஜவாஹிருல்லா

by Staff / 02-03-2024 01:46:14pm
உதய சூரியன் சின்னத்தில் போட்டி: ஜவாஹிருல்லா

உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ம. ம. க ஒரு இடம் கேட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறிய அவர், எந்த தொகுதி கொடுத்தாலும் பரவாயில்லை. திமுக கொடுக்கும் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட தயார் என அறிவித்துள்ளார். அதேபோல், த. வா. க. , வும் ஒரு தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories