இஸ்ரேல்,-ஹமாஸ் பிரதிநிதிகள் எகிப்தில் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இருபது அம்ச திட்டம் உருவாக்கப்பட்டு பேச்சு வார்த்தைக்காக அமெரிக்கா, இஸ்ரேல், ஹமாஸ் பிரதிநிதிகள் எகிப்தில் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர், இந்தப் போர் நிறுத்த பேச்சு வார்த்தையில் ஹமாஸ் சார்பாக அல் ஹய்யா தலைமை தாங்க உள்ளதாக தகவல். இதற்கு இடையே, இஸ்ரேல் தாக்கியதில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும் சனிக்கிழமையில் இது அதிகரித்து இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. பேச்சுவார்த்தையில் ஹமாஸ் குழுவினர் காசாவில் அதிகாரத்தை விட்டுக் கொடுக்க மறுத்தால் முழுமையான அழிவை சந்திக்கும் என்று டிரம்ப எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது
Tags :