கும்முடிபூண்டி அ.தி.மு.க முன்னாள் எம்.எ.ல்.ஏ சுதர்சனம் கொலை 3 பேருக்கு ஆயுள் தண்டனை.

by Admin / 25-11-2025 01:25:17am
கும்முடிபூண்டி அ.தி.மு.க முன்னாள் எம்.எ.ல்.ஏ சுதர்சனம் கொலை 3 பேருக்கு ஆயுள் தண்டனை.

கும்முடிபூண்டி அ.தி.மு.க முன்னாள் எம்.எ.ல்ஏ சுதர்சனம் 2005- ல் பவாரியா கும்பலால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து 62 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர் ,இந்த சம்பவம் தமிழகமெங்கும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ,அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஐஜி ஜாங்கிட் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படைகளை  அமைத்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு உத்தரவிட்டிருந்தார் .இந்நிகழ்வில், அடுத்த மாதத்தில் 9 பேர் கொண்டகுற்றவாளிகள் பிடிக்கப்பட்டனர். இதில் மூன்று பேர் பெண்கள் இரண்டு பேர் வழக்கின் பொழுது சிறையில் உயிரிழந்தனர். ஜாமீன் சென்ற 3 பெண்கள் தப்பி ஓடிய நிலையில், நான்கு பேரில் ஜெகதீஷ் ,ராகேஷ், அசோக் ஆகியோர் குற்றவாளிகள் என்று சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது . அவர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததோடு நான்காவது குற்றம் சாட்ட பெற்ற ஜெயல்தார் சிங் நிரபராதி என்று விடுதலை செய்தது..

 

 

Tags :

Share via