கோவை கல்லூரி மாணவி. கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை

by Admin / 07-03-2026 04:57:59pm
கோவை கல்லூரி மாணவி. கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை

கோவை கல்லூரி மாணவி கடந்த ஆண்டு நவம்பர்nஇரண்டாம் தேதி இரவு தம் நண்பரோடு காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பொழுது மூன்று பேர் மாணவியை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த கருப்பசாமி அவரது தம்பி கார்த்தி மற்றும் தவசி ஆகிய மூவர் மீது பீளமேடு காவல்துறையினர் 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இவ் வழக்கு கோவை மகளிர் மன்றத்தில் நடந்து வந்தது. கைது செய்யப்பட்டவர்களின் டி.என்.ஏ உட்பட 111 ஆதாரங்கள் அடிப்படையில்  மூன்று பேரும் குற்றவாளிகள் என்று காலையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  இன்னும் சில மணிநேரங்களில் தண்டனை விபரம் . வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் . குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியதோடு பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு தரப்பில் ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அவரது நண்பருக்கு இழப்பீடாக 2 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டது .மகளிர் நீதிமன்றம்.  மக்களை உலுக்கிய இந்த வழக்கு நான்கு மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது நீதிக்கு கிடைத்த வெற்றி என்று பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.சா்வ தேச மகளிர் தினத்தில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via

More stories