சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்றவர் கைது

குளத்தூர்-பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்றவர் கைது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் காவல்நிலையம் எல்கைக்கு பகுதிக்கு உட்பட்ட எஸ். விபுரம் அருகே உதவி ஆய்வாளர் முத்துராஜா காவலர் சகிதம் ரோந்து பணியில் இருந்தபோது கிழவைப்பாரைச் சேர்ந்த தர்மர் என்பவர் இரண்டு சக்கரத்தில் - -TN 96 AP 9616 ஹோண்டா ஆக்டிவா - வில் 40 மதுபாட்டில் கொண்டு சென்று திருட்டுதனமாக கூடுதலாக விற்றவரை கையும் களவாக பிடித்து கைது செய்துவழக்கு பதிவு செய்தனர். சட்டவிரோதமாக மேற்கண்ட மதுப்பாட்டில்களை வாங்கி இரண்டு சக்கர வாகனத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வது நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட மதுபாட்டில் விற்பது தெரியவந்தது. அப்பகுதியில் மதுக்கடை5 கிலோமீட்டர் தூரம் செல்லவேண்டிய நிலை அதனால் 24 மணிநேரம் விற்றது விசாரணையில் தெரியவந்தது.
Tags :