தங்கம் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை

கன்னட திரையுலகைச் சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவுக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துபாயில் இருந்து 14.2 கிலோ தங்கம் கடத்தி வந்த நடிகை ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இவர் மீது தற்போது மோசடி பண பரிமாற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறி காபிபோசா சட்டமும் பாய்ந்துள்ளது. தொடர்ந்து ஜாமீன் கோரி வந்த நிலையில், ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags :