சென்னை எழும்பூர் - மதுரை  மெமு ரயில் கூடுதல் நிறுத்தங்கள் -தென்னக  ரயில்வே அறிவிப்பு. 

by Editor / 17-01-2025 11:27:33pm
சென்னை எழும்பூர் - மதுரை  மெமு ரயில் கூடுதல் நிறுத்தங்கள் -தென்னக  ரயில்வே அறிவிப்பு. 

சென்னை எழும்பூர் - மதுரை -  சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் மெமு ரயில் வருகிற 18 மற்றும் 19 தேதிகளில் அம்பாத்துரை, சோழவந்தான் மற்றும் கூடல் நகர் ஆகிய ரயில் நிலையங்களில் கூடுதலாக நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி  ரயில் எண்.06061/06062 சென்னை எழும்பூர் மதுரை - சென்னை எழும்பூர் மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில். 1. ரயில் எண்.06061 சென்னை எழும்பூர்- மதுரை மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் 18.01.2025 அன்று  அம்பாத்துரை ரயில் நிலையத்தில் (18.00/18.02 மணிக்கு), சோழவந்தான் (18.23/18.25 மணிக்கு )
 மற்றும் கூடல்நகர் (18.43/18.45 மணிக்கு) நிறுத்தப்படும். 

  2. ரயில் எண் 06062 மதுரை சந்திப்பு - சென்னை எழும்பூர் மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் 19.01.2025 அன்று கூடல் நகர் (16.08/16.10 மணிக்கு)  சோழவந்தான் (16.23/16.25 மணிக்கு) மற்றும் அம்பாத்துரை மணிக்கு  (16.54/ 16.56 மணி.) நிறுத்தப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Tags : சென்னை எழும்பூர் - மதுரை  மெமு ரயில் கூடுதல் நிறுத்தங்கள் -தென்னக  ரயில்வே அறிவிப்பு. 

Share via