வங்கியிலிருந்து 13 லட்ச ரூபாயை அபகரித்த நபர் கைது

by Editor / 15-06-2022 12:43:24pm
வங்கியிலிருந்து 13 லட்ச ரூபாயை அபகரித்த நபர் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  வேலம்பட்டியைச் சேர்ந்தவர் வீரா (வயது 90) என்பவருக்கும் மதுரையில் உள்ள துரைசாமி நகர் பகுதியை சேர்ந்த வீரணன் என்பவருக்கும் மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலூகா, செங்குளம் கிராமத்தில் நிலபுலன்கள் உள்ளன. இந்த நிலையில் அதனை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி நிவாரண தொகையாக 31,54,198 லட்ச ரூபாய் இருவரின் ஒப்புதலுடன் கூட்டாக வங்கியில் கணக்கில் வைக்கப்பட்டது.

இந்நிலையில் வீரணன் மற்றும் அவரது  மகன் வினோத் வங்கி அதிகாரிகளின் உதவியுடன் மோசடியாக  தங்களது தனிப்பட்ட வங்கியில் வைப்பு வைத்துக் கொண்டுள்ளதாக மதுரை எஸ்.எஸ். காலனி குற்றப்புலனாய்வு பிரிவு காவல்நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் ஒன்றை அளித்தார். புகார் தொடர்பாக எஸ்.எஸ்.காலனி குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் மணிக்குமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு  இது தொடர்பாக விசாரணை நடத்தி வங்கியில் போலியாக  கையெழுத்து பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் தான் கடந்த 3 ஆண்டுகளாக கையெழுத்து போட முடியாமல், கை ரேகை மட்டுமே பதிவு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது வீரனுக்கு சொந்தமான நிலத்துக்கான நிவாரண தொகையை வினோத் தரப்பினர் போலி ஆவணம் தயாரித்து அதற்கான பணத்தை வங்கி அக்கவுண்டில் செலுத்தி கொண்டது தெரியவந்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் முதியவர் வீரா - வின் சொந்தமான நிலத்துக்கு போலி ஆவணம் தயார் செய்து 13 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக எஸ்.எஸ். காலனி குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் வினோத்தை போலீசார் கைது செய்து அவரிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via