காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி தற்கொலை

by Staff / 21-04-2024 12:36:55pm
காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி தற்கொலை

திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபால நகரைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி ஜெய் ஸ்ரீ. இவரும் கிஷோர் என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். சம்பவத்தன்று கிஷோரின் நண்பர் வீட்டிற்குச் சென்ற ஜெய் ஸ்ரீ, அந்த வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்ட கிஷோர் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஜெய் ஸ்ரீ உயிரிழந்தார். கிஷோரின் நண்பர்களில் இருவர் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதால் இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo