மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

by Staff / 28-02-2025 02:05:01pm
மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை ஸ்ரீவில்லிபுத்துார் மாவட்ட மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

விருதுநகர் மாவட்டம், மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை. ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உத்தரவு. இராஜபாளையம் அடுத்த தெற்குவெங்காநல்லூரைச் சேர்ந்தவர் மதீஸ்வரன். இவரும் ஃப்ரீயாவும் கணவன் மனைவி ஆவர். பிரியா ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கு பல வெளியூர்களுக்கு சென்று சம்பாதித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி ப்ரியா மீது நடத்தையில் சந்தேகப்பட்ட மதீஸ்வரன், தன் மனைவி அதிக நபர்களுடன் செல்போனில் பேசுவதாக கருதி இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் வைத்து அறிவாளால் வெட்டியுள்ளார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரியா இறந்த நிலையில் கடந்த 20. 6. 2018 ஆம் தேதி இராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட வழக்கனது ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் மதீஸ்வரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டணை மற்றும் ரூபாய் 10000 அபராதம் வைத்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

Tags :

Share via