சென்னையில் இருந்து உதகைக்கு சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து.சிறுமிபலி 20 பேர் காயம்.

by Editor / 04-05-2024 12:38:26am
சென்னையில் இருந்து உதகைக்கு சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து.சிறுமிபலி 20 பேர் காயம்.

சென்னை கொளத்தூர் பெரம்பூர் பகுதியில் இருந்து உதகைக்கு சுற்றுலா வந்து திரும்பிச் சென்ற சுற்றுலா பயணிகளின் மினி பேருந்து கோத்தகிரி சாலையில் உள்ள முதல் வளைவில் திரும்பும்போது 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த சிறுமியின் உடல் பேருந்துக்கு அடியில் சிக்கி இருப்பதால் அவரின் உடலை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

 

Tags : சென்னையில் இருந்து உதகைக்கு சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து.. 20 பேர் காயம்.

Share via