ஆண் நண்பர் கண் முன்னே இளம்பெண் துடிதுடித்து பலி

செங்கல்பட்டு: வண்டலூரில் ஆண் நண்பர் கண் முன்னே இளம்பெண் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காமேஷ் - நிஷா இருவரும் வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், பைக்கை யு- டர்ன் எடுத்த போது நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதில் நிஷாவின் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில், நிஷாவின் ஆண் நண்பர் கதறி அழும் வீடியோ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :