தமிழக எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல்

பஹல்காம் தாக்குதல் தொடர்பாகவும், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பங்கேற்று பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இந்நிலையில் இது தொடர்பாக வெங்கடேசனுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் சார்ந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக டிஜிபிக்கு வெங்கடேசன் புகார் அளித்துள்ளார்.
Tags :