5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள  50 மூட்டை குட்கா போதை பொருட்கள் பறிமுதல்-3 பேர் கைது.

by Editor / 14-03-2024 11:53:03pm
5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள  50 மூட்டை குட்கா போதை பொருட்கள் பறிமுதல்-3 பேர் கைது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள கோட்டவரதம்பட்டி கிராமம் ஆவரங்கம்பாளையத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் கடத்திச்செல்வதாக சங்ககிரி டிஎஸ்பி ராஜாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் சங்ககிரி இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் போலீசார் வளைய செட்டிபாளையம் பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பூபதி(36),என்பவரது வீட்டு முன்பு ஒரு மினி சரக்கு ஆட்டோ மற்றும் இரண்டு சொகுசு கார்களில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 50 மூட்டை குட்கா போதைப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கடத்திச் செல்வதற்கு தயாராக நின்றதும் அப்போது பூபதி மற்றும் சங்ககிரி குப்தா காலனியைச் சேர்ந்த ராபர்ட் (44), அக்கமாபேட்டையைச் சேர்ந்த அஜித் (27) ஆகிய 3பேரும் வாகனத்தில் அமர்ந்திருந்ததும் தெரியவந்தது.

அங்கு சென்ற போலீசாரை கண்டதும் மூவரும் தப்பியோட முயன்றுள்ளனர். அவர்களை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தபோது பெங்களூரில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டதை ஒத்துக் கொண்டனர்.

 இதனையடுத்து 5லட்சம் ரூபாய மதிப்புள்ள 50 மூட்டைகள் கொண்ட  மற்றும் ஒரு மினி ஆட்டோ, இரண்டு கார்களை சங்ககிரி போலீசார் பறிமுதல் செய்து, குட்கா பொருள் கடத்தலுக்கு காரணமான பூபதி, ராபர்ட், அஜித் ஆகிய மூன்று பேரை கைது செய்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் சங்ககிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

 

Tags : 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள  50 மூட்டை குட்கா போதை பொருட்கள் பறிமுதல்-3 பேர் கைது.

Share via

More stories