பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

by Editor / 14-03-2024 11:50:19pm
பெட்ரோல், டீசல் விலை ரூ.2 குறைப்பு  இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல் தெரிவித்துள்ளார். அண்மையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக குறைக்கப்படாத நிலையில், மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது மத்திய அரசு. விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

 

Tags : இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

Share via