தொழிலாளி அடித்துக்கொலை.. உறவினர்கள் சாலை மறியல்

கோவை கே.எம்.சி.எச். மருத்துவனைக்குள் புகுந்து திருட முயன்றதாக ராஜா என்ற தொழிலாளி மருத்துவமனை காவலாளிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு பின்னர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கையில் மருத்துவமனை நிர்வாகத்தின் பெயரை சேர்க்காததால் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் ராஜாவின் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :