3 நாட்களுக்கு பிறகு வைகோ டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்

by Staff / 29-05-2024 03:39:49pm
3 நாட்களுக்கு பிறகு வைகோ டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்

மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ 3 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தோள்பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வைகோவிற்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்நிலையில், வைகோ ஒரு மாத காலம் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். 3 நாட்களுக்கு பிறகு அவர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo