கூடிய விரைவில் ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்- திருமாவளவன். ஆதவ் அர்ஜூனா நீக்கம் செய்யப்படுகிறாரா..?
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமானம் மூலமாக மதுரை வந்தார்,அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆதவ் அர்ஜூனா கட்சி நலனுக்கு எதிராக பேசி வருவது குறித்து நிர்வாகிகளுடன் பேசியுள்ளேன். விசிக தலைவர்கள் மீதான புகார்களில் கட்சியின் உயர்நிலைக் குழு கூடி முடிவு செய்யும். கூடிய விரைவில் ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்” என்றார். முன்னதாக, அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில், மன்னராட்சி நடப்பதாக ஆதவ் அர்ஜூனா பேசியது விமர்சனத்திற்கு உள்ளானது.மதுரையில் இன்று திருமாவளவன் கொடியேற்ற இருந்த விசிக கொடிக் கம்பத்துக்கு அனுமதி மறுப்பு.வெளிச்சநத்தம் கிராமத்தில் ஏற்கனவே இருந்த 25 அடி உயர கொடிக் கம்பம் 45ஆக உயர்த்தப்பட்டது. 20 அடிக்கு மேல் கொடிக் கம்பம் இருப்பதால் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
Tags : கூடிய விரைவில் ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்- திருமாவளவன். ஆதவ் அர்ஜூனா நீக்கம் செய்யப்படுகிறாரா..?















.jpg)



