விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடுகள்

by Editor / 07-09-2021 10:04:44am
விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடுகள்

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை

விநாயகர் சதுர்த்தி விழாவை, பொது இடங்களில் கொண்டாட அனுமதியில்லாத சூழலில், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடலாம்.சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபராகச்சென்று, அருகில் உள்ள நீர்நிலையில் சிலையை கரைப்பதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.தனிநபர்களுக்கு மட்டும் அனுமதி பொருந்தும்; பொது அமைப்புகள், சதுர்த்தி விழா கொண்டாடுவது முழுவதும் தடை செய்யப்படுகிறது. தனிநபர்கள், வழிபட்ட சிலைகளை, அருகில் உள்ள கோவிலின் அருகே வைத்துச்செல்ல அனுமதிக்கப்படுகிறது.ஹிந்து அறநிலையத்துறை வாயிலாக, சிலைகளை கரைக்க உரிய ஏற்பாடு செய்யப்படும். அனுமதி தனிநபருக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், மேற்கண்ட வழிமுறையை மீறுபவர்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.விழாவுக்காக, பொருட்கள் வாங்க செல்லும் மக்கள், முகக்கவசம் அணிந்து சென்றுவர வேண்டும். வெளியே வரும் போது சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், வழிகாட்டு நெறிமுறைகள் சரிவர பின்பற்ற வேண்டும். 

 

 

Tags :

Share via