காரில் இருவர் தற்கொலை-குழந்தைகள் உயிருடன் மீட்பு.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தேவசாயம் மவுண்ட் முன்பு ஆண்,பெண் இருவர் தற்கொலை, அவர்கள் வந்த சொகுசு காரில் அந்த பெண்ணின் இரு குழந்தைகள் உயிருடன் உள்ளனர். இறந்த ஆண் ஆரோக்கிய சூசை நாதன் (வயது 35) என்பதும் தெரியவந்துள்ளது.இருவரது உடலையையும் போலீசார் கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு உடற் கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு.இந்த சம்பவம் குறித்து ஆரால்வாய் மொழி போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர். இருவர் சொகுசு காரில் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags :