ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

by Staff / 15-07-2023 01:37:55pm
ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

ஒரு நாள் பயணமாக சனிக்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பன்முக இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்த அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஐந்தாவது பயணமாக சென்றுள்ள மோடியை விமான நிலையத்தில் பட்டத்து இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்றார். முன்னதாக வெற்றிகரமான இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தில், அதிபர் இம்மானுவேல் மக்ரோனுடன் பாஸ்டில் தின அணிவகுப்பில் கெளரவ விருந்தினராக மோடி கலந்து கொண்டார்.

 

Tags :

Share via