சூடானில் உள்நாட்டுப் போரினால் இதுவரை சுமார் 40,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

by Admin / 17-02-2026 09:06:55am
சூடானில் உள்நாட்டுப் போரினால் இதுவரை சுமார் 40,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சூடானில் வடக்கு கொர்டோபன்  மாகாணத்தில் உள்ள சோடாரி பகுதியில் ட்ரோன் தாக்குதலில்  28 பேர் கொல்லப்பட்டனர் .பலர் கணக்கானோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களும் அடங்குவர்.
2025 அக்டோபர் மாத இறுதியில், டார்பூர் பிராந்தியத்தில் உள்ள எல்-பாஷர்நகரை துணை ராணுவ ஆதரவுப் படைகள் கைப்பற்ற முயன்றபோது,  மூன்று நாட்களில் 6,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக  ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் வெளியிட்ட புதிய அறிக்கை தெரிவிக்கிறது. இந்தத் தாக்குதல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களாக அமையலாம் என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. கூட்டமாகத் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது கனரக ஆயுதங்களால் சுட்டது மற்றும் இன ரீதியான படுகொலைகள் போன்ற கொடூரமான செயல்களை ஐ.நா ஆவணப்படுத்தியுள்ளது. சூடான் ராணுவத்திற்கும் ஆா். எஸ் .எப்பிற்கும்  இடையே 2023 ஏப்ரலில் தொடங்கிய இந்த உள்நாட்டுப் போரினால் இதுவரை சுமார் 40,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1.2 கோடிக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர்

 

Tags :

Share via
Logo