இன்று தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்
இன்று தமிழக சட்டப்பேரவையில் 2026 2027 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு தாக்கல் செய்கிறார். காகிதம் இல்லா டிஜிட்டல் பட்ஜெட்டாகஇது தாக்கல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதியில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் நடப்பு அரசின் கடைசி பட்ஜெட் ஆகும். தேர்தல் நெருங்கி வருவதால் மகளிர்உரிமை தொகையை உயர்த்துவது அரசு ஊழியர்களின் நலன் சார்ந்த அறிவிப்புக்கள் இதில் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :


















