பில்கிஸ் பானு வழக்கு - நீதிமன்றம் சரமாரி கேள்வி

குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பனோ என்ற பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அவரின் குடும்பத்தினர் 15 பேரை கொன்ற வழக்கில் 11 பேரை கருணை அடிப்படையில் குஜராத் அரசு விடுவித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆயுள் தண்டனையை முழுமையாக அனுபவிப்பதற்கு முன் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது ஏன் எனவும், 14 ஆண்டுகள் சிறையில் இருந்த மற்ற குற்றவாளிகள் ஏன் விடுவிக்கப்படவில்லை எனவும் நீதிபதிகள் சரமாரி கேள்வியெழுப்பினர். விடுதலையை பரிந்துரைத்த சிறைத்துறை ஆலோசனைக்குழுவிடம் அறிக்கை கேட்டு, வழக்கை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Tags :