தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் புதிய படத்தில், பெண் பவுன்சராக நடிக்கிறார் தமன்னா
தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் புதிய படத்தில், பெண் பவுன்சராக நடிக்கிறார் தமன்னா.விஐபிக்கள் தங்களது பாதுகாப்புக்காக தனியார் பாதுகாவலர்களை நியமிப்பார்கள். இவர்கள்தான் பவுன்சர்கள். இப்பணியில் பெண்களும் ஈடுபடுகின்றனர். பாலிவுட்டில் தயாராகும் பப்ளி பவுன்சர் என்ற படத்தில், பவுன்சராக நடிக்கிறார் தமன்னா. இப்படத்தை மதுர் பண்டார்கர் இயக்குகிறார்.இந்தி, தமிழ், தெலுங்கில் இப்படம் உருவாக்கப்படுகிறது. இதுகுறித்து படக்குழுவினர் கூறும்போது, ‘பெண் பவுன்சர் குறித்த கதையை இந்திய திரைத் துறையில் யாரும் தொட்டது இல்லை. அந்தவகையில் இது மிகவும் வித்தியாசமான படமாக அமையும்’ என்றனர்.
Tags :



















