நடிகர் விஜய் நடித்த ஜனநாயகம் திரைப்படம்-நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.
நடிகர் விஜய் நடித்து பொங்கலுக்கு வெளிவர இருந்த ஜனநாயகம் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் தொடர்பாக இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க கோரி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. செவ்வாய்க்கிழமை தலைமை நீதிபதி மகேந்தர மோகன் ஸ்ரீ வஸ்தவா மற்றும் ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு இந்த வழக்கை சுமார் 3 மணி நேரம் விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். விஜயின் கடைசி படமான ஜனநாயகம் சட்ட போராட்டத்தினால் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக வேண்டிய நிலையில் மீண்டும் வெளியீடு தள்ளிப் போய் உள்ளது.
Tags :


















