ஆண்கள் தங்கள் மனைவி அல்லது காதலியுடன் கட்டணம் இன்றி பேருந்தில் செல்லலாம்-கே .டி. ராஜேந்திர பாலாஜி பேச்சு
சிவகாசியில் நடைபெற்ற எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே .டி. ராஜேந்திர பாலாஜி பேசும்பொழுது, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றவுடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2000 ரூபாய் வழங்கும் குலவிளக்கு திட்டத்திற்கான கோப்பில்தான் முதல் கையெழுத்திடுவார் என்றும் தற்போது நடைமுறையில் உள்ள பெண்களுக்கு மட்டுமான இலவச பேருந்து பயணத்திட்டத்தை விரிவுபடுத்தி ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத்திட்டம் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டதோடு இலவச பேருந்து பயணத்திட்டத்தில் ஆண்கள் தங்கள் மனைவி அல்லது காதலியுடன் கட்டணம் இன்றி பேருந்தில் செல்லலாம் என்றும் அவர் மகிழ்ச்சியாகவும் அதே சமயம் தேர்தல் வாக்குறுதியாகவும் தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர் பேச்சு அரசியல் அரங்கில் விவாத பொருளாக மாறி உள்ளது.
Tags :


















