பள்ளி மாணவர்களுக்கு இடையே மோதல் ஒரு மாணவர் உயிரிழப்பு 3 மாணவர்கள் மீது கொலை வழக்கு

by Staff / 30-04-2022 04:49:56pm
பள்ளி மாணவர்களுக்கு இடையே மோதல் ஒரு மாணவர் உயிரிழப்பு 3 மாணவர்கள் மீது கொலை வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல். அருகே பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 மாணவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பாப்பாக்குடி சேர்ந்த செல்வம் என்ற மாணவர் பள்ளக்கள் போதுகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார் கடந்த 25ஆம் தேதி இவருக்கும்  பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் இடையே கையில் சமுதாய கயிறு கட்டுவது பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இருவருக்கும்  ஆதரவாக அவர் நண்பர்களும் ஒன்று கூடவே இரு குழுக்களுக்கு இடையிலான  மோதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. எதிர் தரப்பு மாணவர்கள் கற்களால் தாக்கியதில் செல்வ சூர்யாவுக்கு காதோரம் அடிபட்டு காயமாகி ரத்தம் கொட்டியது தகவல் அறிந்து போலீசார் வந்து சமாதானம் செய்த நிலையில் காயமடைந்த செல்வ சூர்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நான்கு நாட்கள் கடந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் இதனை அடுத்த மூன்று மாணவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். இது மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் இது போன்ற பிரச்சனைகள் உள்ளனவா என ஆய்வு செய்ய பள்ளி மேலாண்மை குழுவுக்கு  மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

 

Tags :

Share via