ஒரே நாடு, ஒரே தேர்தல் - செப்.23ல் முதல் கூட்டம்

by Staff / 16-09-2023 04:30:56pm
ஒரே நாடு, ஒரே தேர்தல் - செப்.23ல் முதல் கூட்டம்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறையை பின்பற்ற ஆளும் பாஜக அரசு கடந்த சில மாதங்களாக தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் இதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், இந்த தேர்தலுக்கு பல்வேறு வகையான கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றது. இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவின் முதல் கூட்டம் செப்.23ஆம் தேதி நடைபெறும் என ராம்நாத் கோவிந்த் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆலோசனை நடத்துவதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo