அணு ஆயுத குறைப்பு 15 ஆண்டுகால புதிய ஒப்பந்தம்

by Admin / 06-02-2026 10:08:15am
அணு ஆயுத குறைப்பு 15 ஆண்டுகால புதிய ஒப்பந்தம்

அணு ஆயுத குறைப்பு 15 ஆண்டுகால புதிய ஒப்பந்தம் நேற்று அதிகாரப்பூர்வமாக ஒரு முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் வரம்புகளை தற்காலிகமாக நீட்டிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் விடுத்த அழைப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  நிராகரித்தார். இந்த ஒப்பந்தம் மோசமான பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் நடத்தப்பட்டது என்றும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பழைய ஒப்பந்தத்தை நீடிப்பதற்கு பதிலாக சீனா உள்ளிட்ட நாடுகளையும் உள்ளடக்கிய நவீன மயமாக்கப்பட்ட புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். 1972 க்கு பிறகு முதல் முறையாக அமெரிக்க மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் எந்த ஒரு சட்டபூர்வமான அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்தின் கீழ் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இது உலகளாவிய அணு ஆயுதப் போட்டியை மீண்டும் தூண்டக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை கவலையை பதிவு செய்துள்ளது. 2010 ஆம் ஆண்டு கையெழுத்தான இந்த ஒப்பந்தம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை 1550 ஆக குறைப்பதற்கு வழி செய்தது. 2021 ரஷ்யாவும் அன்றைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இந்த ஒப்பந்தத்தை 2026 வரை 5 ஆண்டுகளுக்கு நீடித்தனர். ரஷ்யா மற்றும் அமெரிக்க ஆகிய இரு நாடுகளும் புதிய பேச்சு வார்த்தைகளை தொடங்க தயார் என்று கூறியுள்ள நிலையில் சீனாவை இந்த ஒப்பந்தத்தில் இணைக்க வேண்டும் என்ற ட்ரம்பின் கோரிக்கையை சீனா இதுவரை ஏற்க வில்லை

 

Tags :

Share via