குடியரசு துணைத் தலைவருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு

டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துள்ளார். தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு வெளியான நிலையில் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தப் பயணத்தில் ஆளுநர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Tags :