தொழிலதிபர் கருமுத்து டி.சுந்தரம் மீட்பு - கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது. முக்கிய குற்றவாளிகள் 2 பேருக்கு மாவு கட்டு.

மதுரை மாநகர் பீ.பி.குளத்தை சேர்ந்த தொழிலதிபரான கருமுத்து டி.சுந்தரம் கடந்த ஏப் 6ம் தேதி வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இந்த புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் காவல்துறையினர் கருமுத்து டி.சுந்தரம் கடத்தப்பட்ட வழக்கில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த அருள்செல்வம், நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜனநேந்திரன், முத்துகிருஷ்ணன்,விக்னேஷ், தென்காசியை சேர்ந்த அருண் , திண்டுக்கல்லை சேர்ந்த மரியராஜ் ஆகிய 6 பேர் நேற்றுமுன்தனம் சிறையில் அடைப்பு.
கடத்தப்பட்ட தொழிலதிபர் கருமுத்து டி.சுந்தரத்தின் சகோதரி கனடாவில் இருந்தபடி தனது சகோதரரை மீட்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ வெளியிட்ட நிலையில் கருமுத்து டி.சுந்தரத்தை தனிப்படை காவல்துறையினர் மீட்டனர்.
கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் இருவர் காவல்துறையினரை பார்த்து தப்பியோட முயன்ற போது மதுரை பாண்டி கோவில் ரிங் ரோடு அருகே மேம்பாலத்தில் இருந்து குதித்த போது இருவருக்கும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி இருவரும் கைது.
Tags : தொழிலதிபர் கருமுத்து டி.சுந்தரம் மீட்பு - கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் கைது. முக்கிய குற்றவாளிகள் 2 பேருக்கு மாவு கட்டு.