2024ல் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான்

by Staff / 31-12-2022 11:50:57am
2024ல் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே களமிறங்குவார் என காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத் தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பயணம் செய்து வரும் ராகுல் காந்தி, அதிகாரத்துக்காக அரசியல் பணிகளைச் செய்யாமல் சாமானியர்களுக்காகவே செய்கிறார் என்று கமல்நாத் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முகமாக மட்டுமல்லாமல், பிரதமர் வேட்பாளராகவும் ராகுல் காந்தி இருப்பார். பதவிக்காக ராகுல் அரசியல் செய்யவில்லை. நாட்டு மக்களுக்காக. யாரையும் ஆட்சியில் அமர்த்த அவர்களுக்கு உரிமை உண்டு. உலக வரலாற்றில் ராகுலைப் போல ஒரு பாதயாத்திரை நடந்ததில்லை. காந்தி குடும்பத்தைப் போல நாட்டிற்காக தியாகம் செய்த குடும்பம் வேறு இல்லை என்று கமல்நாத் கூறினார்.
 

 

Tags :

Share via