சென்னை புயல் மழை எதிரொலி தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் ரத்து

by Editor / 04-12-2023 07:50:54pm
சென்னை புயல் மழை எதிரொலி தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் ரத்து

சென்னையில் நிலவி வரும் புயல், மழை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி டிசம்பர் 4 இன்று புறப்பட வேண்டியது நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (22658), மதுரை - சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638), செங்கோட்டை - சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் (12662),  நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692),  கொல்லம் - சென்னை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (20636),  கன்னியாகுமரி - சென்னை எக்ஸ்பிரஸ் (12634), மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் செங்கோட்டை - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (20684), திருநெல்வேலி - சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் (12632), தூத்துக்குடி - சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12694),  விருத்தாசலம் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - சென்னை  எக்ஸ்பிரஸ் (22662), தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - சென்னை  எக்ஸ்பிரஸ் (16752),  மதுரை - டெல்லி நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் (12651),  திருச்செந்தூர் - சென்னை செந்தூர் எக்ஸ்பிரஸ் (20606),  குருவாயூர் - சென்னை எக்ஸ்பிரஸ் (16128) ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

 

Tags : சென்னை புயல் மழை எதிரொலி தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் ரத்து

Share via