21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

by Editor / 25-05-2021 08:47:23pm
21 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

 

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 21 பேரை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் உயர்கல்வித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனரான ஜோதி நிர்மலா சுவாமி வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவன முதன்மைச் செயலாளர் காக்கர்லா உஷா பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலாளராக சுப்ரியா சாகுவும் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக சந்தீப் சக்சேனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளராக குமார் ஜெயந்த், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக கார்த்திகேயனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories