தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் இயக்கியுள்ளது
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களினுடைய பயன்பாட்டிற்கு கோயம்பேட்டில் இருந்து கிட்டத்தட்ட 500 சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் இயக்கியுள்ளது இருப்பினும், மக்களுடைய கூட்டம் கட்டுக்கடங்காமல் கோயம்பேடு முழுவதும் நிரம்பி வழிந்தன. ஒரு பேருந்து வருவதற்காக காத்திருக்கையில் இரண்டு பேருந்துக்கான மக்கள் கூடி விட்டதால், இடம் கிடைக்காமல் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி மக்கள் முண்டி அடித்து அங்கும் இங்கும் அலைபாய்கின்ற நிலை காணப்பட்டது. சேலம், திருவண்ணாமலை, வேலூர்,மதுரை ,திருச்சி, அரியலூர், கும்பகோணம் போன்ற பகுதியில் பேருந்துகளை பிடிப்பதற்கு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருந்தார்கள். வயது முதிர்ந்தவர்களும் குழந்தைகளோடு இருந்த தாய்மார்களும் அங்குமிங்கும் பேருந்துகளுக்காக அல்லாடினர். தொடர் விடுமுறையை கருத்தில் கொண்டு அதிகபட்சமாக இன்னும் 200 இல் இருந்து 300 பேருந்துகள் விடப்பட்டிருந்தால் மக்கள் சிரமமின்றி சென்று இருப்பார்கள்.
Tags :