படகு கவிழ்ந்து 25 பேர் பரிதாப பலி

by Staff / 14-04-2023 11:39:18am
படகு கவிழ்ந்து 25 பேர் பரிதாப பலி

மத்தியதரைக் கடலில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில், 25 புலம்பெயர்ந்தோர் இறந்த நிலையில், 15 பேர் காணாமல் போயுள்ளனர். உஷார்படுத்தப்பட்ட கடலோர காவல்படை வீரர்கள் 72 பேரை பத்திரமாக மீட்டனர். புதன்கிழமை 10 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், படகின் அடியில் சிக்கியிருந்த 15 பேரின் உடல்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டன. துனிசியாவில் நடந்த விபத்தில் பலியானவர்கள் அனைவரும் துணை-சஹாரா ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதம், இதேபோன்ற சம்பவங்களில் சுமார் 52 பேர் இறந்து, 70 பேர் காணாமல் போயுள்ளனர்.

 

Tags :

Share via