லாரி - சொகுசு பஸ் மோதல்: 2 பேர் பலி

by Staff / 08-04-2023 03:00:43pm
லாரி - சொகுசு பஸ் மோதல்: 2 பேர் பலி

கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து 21 பயணிகளுடன் சொகுசு பேருந்து ஒன்று ஊட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்து மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே அதிகாலை 3 மணிக்கு வந்தபோது, ஆந்திராவிற்கு மாடுகளை ஏற்றி சென்ற லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சின்னப்பன், அவரது உதவியாளர் பழனிசாமி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த பேருந்துவந்த பயணிகளையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தால் தொப்பூர் - மேட்டூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories