முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல்

by Staff / 25-11-2022 05:03:28pm
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்திருந்த நிலையில் அவருக்கு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

தற்போது தனக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனில் இடம்பெற்றிருக்கும் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த மனுவிற்கு ஆளும்கட்சி அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories