தமிழக முதலமைச்சர் விஜய் இன்று தமிழக சட்டமன்றத்தில் தம் முதல் உரையை தொடங்கினார்.
தமிழக முதலமைச்சர் விஜய் இன்று தமிழக சட்டமன்றத்தில் தம் முதல் உரையை தொடங்கினார். கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்குள் சொல்லாத துயரங்களை அனுபவித்ததாகவும் தங்களுடைய கட்சிக்கு ஊழல் செய்யத் தெரியாது என்றும் கஜனாவை நிரப்பத்தான் தெரியும் என்றும் ஆட்சிக்கு வந்து 40 நாட்களில் 200 யூனிட் இலவசம் மின்சாரம், சிங்கப்பெண் அதிரடி படை, விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி,மதுபானக்கடைமூடல் என போன்ற திட்டங்களை செய்திருப்பதாகவும் மின்வெட்டிற்கு இயந்திரங்கள் பழுதாகி போவது ஒரு காரணம் என்றும் மாற்றுக் கட்சியினரின் தூண்டுதல் காரணமாக சில வேலைகள் செய்வதன் காரணமாகவும் மின்சார தட்டுப்பாடு நிலவுவதாகவும் இன்னும் ஆறு மாசம் அவகாசம் கொடுங்கள் மக்களுக்கான ஒரு நல்ல ஆட்சியை தருவோம் என்றும் சேர மாட்டார்கள் என்று நினைத்தவர்களோடு எல்லாம் சேர்ந்து நமது ஆட்சியை அகற்றிவிட்டு ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைத்தவர்கள். அவர்களுக்கு மக்கள் தக்க பதிலளித்து உள்ளதாகவும் இரண்டு ஆண்டுகளில் 35 விழுக்காடு வாக்குகளைப் பற்றி இறுதி பெரும்பான்மை ஆட்சி அமைத்திருப்பதாகவும் தெரிவித்தார். நமது அரசியல் எதிரி யார் என்றும் கொள்கை எதிரி யார் என்றும் உங்களுக்கு தெரியும் எம்ஜிஆரையும் அண்ணாவையும் அரசியல் முன்னோடியாக கொண்டு தமிழக வெற்றி கழகம் இயங்குவதாகவும் தெரிவித்தார்.
Tags :

















