2 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை

உத்திரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது மனைவியுடன் செங்கல் சூளைக்கு வேலைக்குச் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், மாலையில் வேலைக்குச் செல்வோம் என கணவர் கூறியுள்ளார். இதற்கு மனைவி இப்போதே போக வேண்டும் என மறுத்துள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
Tags :