ஆன்லைன் கேமில் ரூ.4 லட்சத்தை இழந்த பெண்
ஆன்லைன் லுடோ கேமுக்கு அடிமையான இளம் பெண் ரூ.4 லட்சத்தை இழந்து தனது இரண்டு குழந்தைகளுடன் ஊரை விட்டு வெளியேறினார். பெங்களூரைச் சேர்ந்த 26 வயது இளம் பெண் ஒருவர் ஆன்லைன் கேமிங்கில் நான்கு லட்சம் ரூபாயை இழந்துள்ளார். முன்னதாக, பணத்தை இழந்த இளம் பெண் தங்கத்தை அடகு வைத்துள்ளார். இதனால் தம்பதியினரிடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. தொடர்ந்து, ஆன்லைன் கேம் விளையாடுவதை நிறுத்துவதாக இளம்பெண் கணவரிடம் உறுதியளித்துள்ளார். இந்த நிலையில், அப்பெண் குழந்தை மற்றும் பணத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார். மேலும், கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமாகியுள்ளார்.
Tags :