அதிமுகவினர் சாலைமறியல் -அதிமுக வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

by Editor / 07-02-2022 04:20:04pm
அதிமுகவினர்  சாலைமறியல் -அதிமுக வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் போட்டியிடும் இந்திராணி என்ற அதிமுக வேட்பாளரை திமுகவினர் கடத்தி வைத்துள்ளனர் என்று கூறி முன்னாள் அமைச்சரும், அதிமுக மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் பேருந்து நிலையம் முன்பாக  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் கடத்தப் பட்டதாக கூறும் வேட்பாளர் இந்திராணி தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதோடு  தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தனது சுயவிருப்பத்தின் பேரில் தான் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதாக தெரிவிக்கவே வெறுப்படைந்த அதிமுகவினர் கலைந்து சென்றனர்.

 

Tags : அதிமுகவினர் சாலைமறியல்

Share via

More stories