காட்டு யானைகளால் தாக்கப்பட்டு பலியாகும் தொழிலாளர்கள்

by Staff / 31-12-2022 01:22:10pm
காட்டு யானைகளால் தாக்கப்பட்டு பலியாகும் தொழிலாளர்கள்

குமரி மாவட்டம் சிற்றாறு கோட்ட அரசு ரப்பர் கழக தோட்டத்தில் நிரந்தர பணியாளராக பணியாற்றும் அம்மா ஞானவதி வயது 54 என்பவர் தனது கணவர் மோகன்தாஸ் உடன் சேர்ந்து தனக்கு வழங்கப்பட்ட பணியிடமான
சிற்றார் கோட்டம் கூப்பு எண் 42 ல் ரப்பர் பால் வடிக்கும் பணிக்கு சென்ற நிலையில் அப்பகுதியில் குட்டியுடன் ஒளிந்திருந்த காட்டுயானை கடுமையாக தாக்கியதில் கணவர் கண்ணெதிரே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.இவர்கள் கடந்த 23-12-22 அன்றும் யானை துரத்தி ஓடியதில் காலில் தசைபிடிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார்கள்.இதற்கு முன்பும் இப்பகுதியில் மகேஷ்வரி, ஞானமணி, அங்கம்மா ராஜி போன்றோர் ஏற்கனவே மரணமடைந்துள்ளார்கள். சந்திரா என்பவர் காட்டுமாடு தாக்கியதில் மரணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த கொடுஞ்செயலுக்கு அரசு ரப்பர் கழக நிர்வாகத்தின் அலட்சியமும், தொழிலாளிகளை வஞ்சிக்கும் எண்ணமும், பாராமுகமும், ஒப்பந்தப்படி பணிகளை செய்யாததுமே காரணம் என அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
 

 

Tags :

Share via