என் மீது புனையப்பட்ட பொய் வழக்கு- செந்தில் பாலாஜி

தன் மீது புனையப்பட்ட பொய் வழக்கு என நீதிபதியின் கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி, "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது. சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும்" என நீதிபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags :