டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு

லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று (பிப்.,28) நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்பேரில், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பந்து வீச தயாராகி வருகின்றனர்.
Tags :