கார் விபத்தில் எம்.எல்.ஏ. மரணம்

by Staff / 23-02-2024 11:56:07am
கார் விபத்தில் எம்.எல்.ஏ. மரணம்

தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதி எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தானது ஹைதராபாத்தில் உள்ள படன்சேரு அருகே சுல்தான்பூர் ஓஆர்ஆர் பகுதியில் நடைபெற்றுள்ளது. அவர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே இருந்த டிவைடரில் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த லாஸ்யா நந்திதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நார்கட்பள்ளி அருகே செர்லபள்ளி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் லாஸ்யா நந்திதா தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via